Friday 4 June 2010 | By: Menaga Sathia

கோஸ் அப்பளப்பூ கூட்டு

தே.பொருட்கள்:

நறுக்கிய கோஸ் - 1 கப்
பொரித்த அப்பளப்பூ - 5
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1
கடலைப்பருப்பு - 3/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
சோம்பு - 3/4 டீஸ்பூன்
நசுக்கிய பூண்டுப்பல் - 3
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
*கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து பாத்திரத்தில் வேகவைக்கவும்.

*3/4 பாகம் பருப்பு வந்ததும் கோஸ்+பச்சை மிளகாய் +தக்காளி+வெங்காயம் சேர்த்து மேலும் நன்கு வேக வைக்கவும்.

*அனைத்தும் நன்கு வெந்ததும் நொறுக்கிய அப்பளப்பூ+உப்பு+உருளையை உதிர்த்து போடவும்.

*கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து போடவும்.

37 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

Nice koottu.. this is new to me.. thxs for sharing..

ப்ரியமுடன் வசந்த் said...

பார்க்கவே அழகா இருக்கு....

நட்புடன் ஜமால் said...

பருப்பு ஆனம்-ன்னு ஒன்னு செய்வாங்க எங்க அம்மா - அதில் அப்பளப்பூவை பொறித்து போடுவாங்க - ஆஹா! அந்த மணம் ...

r.v.saravanan said...

Nice koottu

GEETHA ACHAL said...

அம்மா அடிக்கடி இப்படி தான் செய்வாங்க...சூப்பராக இருக்கும்..இங்கு நான் இப்படி செய்தால், இவர் உனக்கு வேனுமானால் அப்பளத்தினை உடைத்து போட்டு கொள்...எனக்கு தனியாக கொடுத்துவிடு...அதனை சாதத்துடன் சாப்பிடும் பொழுது கூட சாப்பிட்டு கொள்கிறேன் என்று சொல்லுவார்...

ஸாதிகா said...

வித்தியாசமான கூட்டுதான்.

Asiya Omar said...

அப்பளப்பூவை கூட்டில் உடைத்து போடுவது இப்ப தான் கேள்விப்படுறேன்.அருமை.

நட்புடன் ஜமால் பருப்பு ஆனத்தில் அப்பளப்பூவா?அதுவும் செய்து பார்க்கணும்.அம்மா கைமணம் ஆச்சே.

Padhu Sankar said...

Nice idea to add appalam to kootu

Umm Mymoonah said...

appalapu in kootu is new for me, looks so delicious, thank you for sharing

பனித்துளி சங்கர் said...

வழமைபோல இன்றும் சமையல் புதுமைதான் . பகிர்வுக்கு நன்றி

Nithu Bala said...

picture-ra parthavey kootu manam, suvai ellam eppadi superb ba irukkum nu theriuthu..next time kootu ethey matiri pannaren..

Priya Suresh said...

Kootu supera irruku naan appalam vachi than kootu seiyven, cabbage serthu pannurathu superb ponga..

ஜெய்லானி said...

பாக்கும் போதே தந்தூர் ரொட்டிக்கு சரியான டிஷ் ஆ இருக்கும் போல....

Menaga Sathia said...

நன்றி ஸ்ரீப்ரியா!!

நன்றி வசந்த்!!

நன்றி சகோ!!அம்மாவின் கைமணமே தனிதான்..

நன்றி சரவணன்!!

நன்றி கீதா!!

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி பது!!

நன்றி உம் மைமூனா!!

Anonymous said...

புதுசா இருக்கே ...செஞ்சு பார்க்கறேன் .அப்பள்ள பூ என்றால் என்ன ? சொல்லறிங்களா..

Menaga Sathia said...

நன்றி சங்கர்!!

நன்றி நிது!! செய்து பாருங்கள்...

நன்றி ப்ரியா!!முக்கால்வாசி கோஸில் தான் கூட்டு செய்வேன்...

நன்றி ஜெய்லானி!! இதை நாங்க காரகுழம்பிற்கு செய்து சாப்பிடுவோம்...

Anonymous said...

புதுசா இருக்கே ...செஞ்சு பார்க்கறேன் .அப்பள்ள பூ என்றால் என்ன ? சொல்லறிங்களா..

Mahi said...

கூட்டு நல்லா இருக்கு மேனகா! அப்பளப்பூ கேரளா சைட் அப்பளம் தானே? போட்டோவும் சூப்பர்!

Menaga Sathia said...

அப்பளப்பூ என்றால் அப்பளம் மாதிரிதான் ஆனா ஓவல் ஷேப்பில் இருக்கும்.நன்றி சந்தியா!!

//அப்பளப்பூ கேரளா சைட் அப்பளம் தானே?// புரியலை மகி,கேரளா சைட் மார்க் அப்பளமா??? ஒவல் ஷேப்பில் இருக்கும்.அப்பளம் டேஸ்டில்தான் இருக்கும்.நன்றி மகி!!

athira said...

வித்தியாசமான குறிப்பாக இருக்கு மேனகா. அப்பளப்பூ என எதைச் சொல்றீங்கள்? அப்பளத்தைத்தானோ?

Cool Lassi(e) said...

Yumm. Simply delicious!

vanathy said...

Menaga, super recipe.

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு மேனகா நானும் இப்படி செய்வேன் ஆனால் கோஸ்க்கு பதில் கொத்தமல்லி சேர்த்து கொள்வேன்....

SathyaSridhar said...

Menaga,,,nalla kootu kose um appalam um serthu romba taste ah irukkum,,naan appam ah namma morkozhambu seivoemla athula norikki poeduven nalla taste ah irukkum..

Aruna Manikandan said...

looks delicious dear!!!

சசிகுமார் said...

நல்ல பதிவு அக்கா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மாதேவி said...

வித்தியாசமான கூட்டு மேனகா.

Menaga Sathia said...

ஆமாம் அதிரா அப்பளப்பூன்னா அப்பளம்தான்.அப்பளம் வட்டமா இருக்கும்,அப்பளப்பூ ஒவல்ஷேப்ல இருக்கும்.நன்றி அதிரா!!

நன்றி கூல்!!

நன்றி வானதி!!

நன்றி சாரு அக்கா!! கொத்தமல்லி சேர்த்து செய்ததில்லை...

Menaga Sathia said...

நன்றி சத்யா!!

நன்றி அருணா!!

நன்றி சசி!!

நன்றி மாதேவி!!

சிநேகிதன் அக்பர் said...

செய்து பார்த்துவிட வேண்டியதுதான்.

Anonymous said...

அப்பளப்பூன்னா என்ன என்று கேட்கவேண்டும் என்று வந்தேன். ஆனால் அதற்கு முன்பே என்னோட ட்வின் (என்னை மாதிரியே சந்தேகம் இருந்ததால்) கேட்டு என்னக்கு எதுவுமே எழுத இல்லாமல் பண்ணினதுக்கு கண்டனங்கள். ட்ரை பண்ணி பார்க்கிறேன். ஆனா, காமேஜ் வேண்டாம்..அவ்வ்வ்வ்வ்... வேற ஏதாவது காய்கறிக்கு செய்யலாமா? அம்மாவோட காபேஜ் வரை தவிர வேற இடத்தில் சாப்பிடுறது இல்லை. எனக்கும் காபேஜ்ஜுக்கும் ஆகாது.

Menaga Sathia said...

நன்றி அக்பர்!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி அனாமிகா!! இப்போ அப்பளப்பூ சந்தேகம் தீர்ந்துடுச்சா...கோஸ் போடாமலும் இதே மாதிரி செய்யலாம் அல்லது கோஸ்க்கு பதில் கத்திரிக்கயை பொடியாக அரிந்து போட்டும் செய்யலாம்.கத்திரிக்காயில் செய்யும் போது உருளைக்கிழங்கு தேவையில்லை...

Anonymous said...

I love brinjal too. I am going to make it for breakfast. Yahoo! Do not I need to soak Besan Dal in water before cooking. I rarely use pressure cooker.

Anonymous said...

I was waiting for this koothu. In my college days, one of my friend used to bring this, I asked her the receipe but she din't. now i got it. Thx.

Menaga Sathia said...

கத்திரிக்காயில் செய்து பார்த்து சொல்லுங்கள்.பருப்பு வகைகளை சமைப்பதற்க்கு முன் ஊறவைத்து வேகவைத்தால் சீக்கிரம் வேகும்,எரிபொருளும் மிச்சமாகும்.நன்ரி அனாமிகா..

நன்றி அனானி!! உங்கள் பெயரை சொல்லியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன்..

Jaleela Kamal said...

நல்ல அழக்கா கட் பண்ணி இருக்கீங்க காய் + வெங்காயத்தை.

நானும் அப்பளபூ என்று எதை சொல்றீஙக்ன்னு கேட்கவந்தேன் , அபப்ளத்தை தான் அப்பள பூ என்று சொல்றீஙக்ளா?

01 09 10