Wednesday, 8 September 2010 | By: Menaga Sathia

மாங்காய் இஞ்சி தேங்காய் சட்னி/Mango Ginger Coconut Chutney

சாதரணமாக சட்னி அரைக்கும் போது இஞ்சி உபயோகபடுத்துவோம்.அதற்கு பதில் மாங்காய் இஞ்சி சேர்த்து அரைத்தால் மாங்காய் வாசனையுடன் சட்னி அருமையாக இருக்கும்.அதுமட்டுமில்லாமல் அரைக்கும் போது தண்ணீருக்கு பதில் தேங்காய் உடைத்த நீரை சேர்த்து அரைத்தால் இன்னும் ருசியாக இருக்கும். (தேங்காய் உடைத்த நீரை சுவைத்து பார்த்த பின் அரைப்பது நல்லது.)தே.பொருட்கள்:
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம்- 3
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மாங்காய் இஞ்சி - 1 துண்டு
தேங்காய் உடைத்த நீர் - தேவையானளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது
செய்முறை:
*முதலில் பொட்டுக்கடலை பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து பின் தேங்காய்துறுவல்+மாங்காய் இஞ்சி+உப்பு+கொத்தமல்லித்தழை சேர்த்து தேங்காய் உடைத்த நீர் கெட்டியாக மைய அரைக்கவும்.

*கடைசியாக சின்ன வெங்காயத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைத்தெடுக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்துக் கொட்டவும்.
Tuesday, 7 September 2010 | By: Menaga Sathia

மாங்காய் இஞ்சி குழம்பு

தே.பொருட்கள்:
புளிகரைசல் - 1 1/2 கப்
சாம்பார் பொடி - 1டேபிள்ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 10
நறுக்கிய தக்காளி - 1
பூண்டுப்பல் - 6
உப்பு +நல்லெண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
நறுக்கிய மாங்காய் இஞ்சி - 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
(மாங்காய் இஞ்சியின் படம்)

தாளிக்க:
வடகம் - 3/4 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் மாஞ்காய் இஞ்சியை மட்டும் எண்ணெயில் வதக்கி அதனுடன் தேங்காய் சேர்த்து மைய அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு+தக்காளி+சாம்பார்பொடி+உப்பு சேர்த்து நன்கு வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*குழம்பு நன்கு கொதித்ததும் அரைத்த இஞ்சி விழுதை சேர்த்து கொதிக்க வைத்து எண்ணெய் பிரியும் போது இறக்கவும்.

ஆயிஷா அவர்கள் கொடுத்த விருது.நன்றி ஆயிஷா!!

Monday, 6 September 2010 | By: Menaga Sathia

மேத்தி சிக்கன்

தே.பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
வெந்தயக்கீரை - 1/2 கப்
அரிந்த வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2 அரைத்துக் கொள்ளவும்
இஞ்சி பூண்டு விழுது - 1டேபிள்ஸ்பூன்
தக்காளி - 1 அரைத்துக் கொள்ளவும்
தயிர் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*வெங்காயத்தை எண்ணெயில் பிரவுன் கலரில் பொரித்து ஆறவைத்து தயிருடன் விழுதாக அரைக்கவும்.

*வெந்தயக்கீரையை உப்பு+சர்க்கரை கலந்த நீரில் 15 நிமிடம் வைத்து நன்கு அலசி வைக்கவும்.

*வெந்தயக்கீரையை ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நன்கு மொறுமொறுப்பாக பொரித்து தனியாக வைக்கவும்.

*அதே கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.பின் சீரகப்பொடி+எல்லா தூள் வகைகள் சேர்த்து வதக்கி தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

*பின் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி மூடி போட்டு வேகவிடவும்.

*வெந்த பின் பொரித்த வெந்தயக்கீரை+கரம் மசாலா+தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து நன்கு கிரேவி பதத்திற்க்கு வரும் போது இறக்கவும்.

*சாதம்+சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்
Friday, 3 September 2010 | By: Menaga Sathia

தஹி பூரி

தே.பொருட்கள்:பூரிக்குரவை - 1 கப்
மைதா - 1/2 கப்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :* ரவி +மைதா+உப்பு+ 1 டேபிள்ஸ்பூன் சூடு எண்ணெய்+தேவையான் நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 15 நிமிடங்கள் வைக்கவும்.
*பிசைந்த மாவை பெரிய உருண்டையாக எடுத்து உருட்டி வட்டமான மூடியால் அல்லது குக்கீ கட்டரால் வட்டங்களால் வெட்டிக் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

புதினா சட்னி :
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
வெல்லம் - 1 சிறுகட்டி
பச்சை மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
* இவை அனைத்தும் மிக்ஸியில் அரைக்கவும்.

இனிப்பு சட்னி:
பேரிச்சை பழம் - 5
உலர் திராட்சை - 5
புளி - 1 கொட்டைபாக்களவு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்குவெல்லம் - 1 சிறு கட்டி
* இவை அனைத்தும் 1/2 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவைத்து,அரைத்து வடிக்கட்டவும்.

தஹி பூரிக்கு செய்ய தே.பொருட்கள்பூரி - 10
தயிர் - 1 கப்
ஸ்வீட் சட்னி - தேவைக்கு
க்ரீன் சட்னி - தேவைக்கு
வேக வைத்த மசித்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
வேக வைத்த கொண்டைக்கடலை - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி - 1
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
பூந்தி - தேவைக்கு

செய்முறை :
* தயிரில் சாட் மசாலா+உப்பு+சீரகத்தூள்+மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும்.
*ஒரு பூரியின் ஒரு பக்கத்தை உடைத்து உருளைக்கிழங்கு+சென்னா+வெங்காயம்+தக்காளி + ஸ்வீட் சட்னி+ க்ரீன் சட்னி+தயிர் +பூந்தி வைத்து பரிமாறவும்.
*பூரி+க்ரீன் சட்னி+ஸ்வீட் சட்னி எல்லாவற்றையும் மொத்தமாக தயாரித்து வைத்துக்கொள்ளலாம்.பூரிகளை காற்று புகாத டப்பாவில் வைக்கலாம்.சட்னிகளை ப்ரிட்ஜில் 1 மாதம் வரை உபயோகிக்கலாம்.
Thursday, 2 September 2010 | By: Menaga Sathia

மரவள்ளிக்கிழங்கு தோசை

தே.பொருட்கள்:
துருவிய மரவள்ளிக்கிழங்கு - 1 கப்
புழுங்கலரிசி - 1 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :
*அரிசி+கடலைப்பருப்பு+கா.மிளகாய் அனைத்தையும் 2 மணிநேரம் ஊறவைத்து சோம்பு+உப்பு+மரவள்ளிக்கிழங்கு சேர்த்து மைய அரைக்கவும்.

*விருப்பப்பட்டால் தாளித்து வெங்காயம் வதக்கியும் சேர்க்கலாம்.

*அரைத்த மாவை தோசைகளாக சுட்டு சட்னியுடன் பரிமாறவும்.
 
பி.கு:
இந்த மாவை அரைத்த உடனே சுடவும்.புளித்துவிட்டால் நன்றாகயிருக்காது.இந்த தொசை மென்மையாகதான் இருக்கும்,மொறுமொறுப்பாக இருக்காது...
Wednesday, 1 September 2010 | By: Menaga Sathia

பூசணிக்காய் மோர் குழம்பு

தே.பொருட்கள்:
வெள்ளை பூசணிக்காய் துண்டுகள்- 1 கப்
தயிர் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்
தனியா- 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி -1 சிறுதுண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*துவரம்பருப்பு+பச்சரிசியை 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.தயிரில் உப்பு+எலுமிச்சை சாறு சேர்த்து கடைந்து வைக்கவும்.

*கடாயில் எண்ணெய்விட்டு தனியா+காய்ந்த மிளகாய்+பச்சை மிளகாய்+இஞ்சி+ஊறவைத்த அரிசி பருப்பு இவைகளை வறுத்து இதனுடன் தேங்காய்+சீரகம் சேர்த்து மைய அரைக்கவும்.

*பாத்திரத்தில் பூசணிக்காய்+துண்டுகளாகிய தக்காளி போட்டு முழ்குமளவு நீர்விட்டு மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் அரைத்தவிழுது சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும்.நன்கு கொதித்ததும் கடைந்த தயிரை ஊற்றி நுரைவரும் போது இறக்கி கடுகு+கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.

பூந்தி லட்டு/Boondhi Ladoo | Diwali Recipes

தே.பொருட்கள்:
கடலை மாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
சமையல் சோடா - 1 சிட்டிகை
நெய் - 3 டீஸ்பூன்

கல்கண்டு- 1/2 டேபிள்ஸ்பூன்
பச்சை கற்பூரம்- 1 சிட்டிகை
கிராம்பு -4
ஜாதிக்காய் பொடி- 1/8 டீஸ்பூன்

 முந்திரி,திராட்சை - 1/8 க‌ப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :
*கடலை மாவு+சமையல் சோடா இரண்டையும் கலந்து சலிக்கவும்.

*அதனுடன் மஞ்சள் கலர்+1 டீஸ்பூன் நெய் கலந்து தோசை மாவு பதத்திற்க்கு நீர் சேர்த்து கலக்கவும்.கண் கரண்டியில் ஊற்றினால் மாவு விழணும் அதுதான் சரியான பதம்.

*இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு 3/4 கப் நீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.

*2 கம்பி பதம் பாகு காய்ச்சவும்.2 விரல்கலுக்கு இடையே தொட்டல் 2 இழை போல வரும்.

*1 கம்பி பதம் வந்ததும் சில நொடிகலிலேயே 2 கம்பி பதம் வரும்,கவனமாக எடுக்கவும்.

*எல்லா மாவையும் கண்கரண்டியில் தோய்த்து பூந்திகளாக பொரித்து வைக்கவும்.




*பொரித்த பூந்திகளை சர்க்கரை பாகில் கலந்ததும் பச்சை கற்பூரத்தை கையால் நன்கு பொடித்து கலந்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.



*நெய்யில் கிராம்பு+முந்திரி திராட்சை+ஜாதிக்காய் பொடி சேர்த்து வறுத்து பூந்தியில் சேர்க்கவும்.

*கடைசியாக கற்கண்டு சேர்த்து லட்டுகளாக பிடிக்கவும்.
பி.கு:

*முதலில் பூந்தியை பொரித்த பிறகு,கடைசியாக சர்க்கரை பாகு வைத்து லட்டு பிடிக்கவும்.

*கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.ஆறினால் கூட பூந்திகளை அழுத்தி பிடிக்கும் போது சர்க்கரை பாகிலிருந்து வரும் நீரிலயே லட்டு பிடிக்க முடியும்.

*1 கம்பி பதத்திலும் பாகு வைத்து லட்டு பிடிக்கலாம்.

*2 கம்பி பதம் வைத்து செய்தால் லட்டு சர்க்கரை பாகு பூத்து அழகாக இருக்கும்,மேலும் கூடுதல் நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.



01 09 10