Sunday 6 June 2010 | By: Menaga Sathia

பைனாப்பிள் ஸ்கோன்ஸ்

தே.பொருட்கள்:

கோதுமை மாவு - 1 1/2 கப்
ஒட்ஸ் - 1 கப்
பொடித்த பிரவுன் சர்க்கரை - 1 1/2 கப்
பொடியாக நறுக்கிய பைனாப்பிள் தூண்டுகள் - 1/2 கப்
பட்டர் - 1/4 கப்
வெஜிடபிள் எண்ணெய் - 1/4 கப்
பட்டைதூள் - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
 
செய்முறை :
* கோதுமை மாவு+ஒட்ஸ்+பட்டைதூள்+பேக்கிங் பவுடர் ஒன்றாக கலக்கவும்.

*ஒரு பவுலில் பட்டர்+எண்ணெய்+சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக கலந்து சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.

*இதனுடன் மாவு வகைகள்+பைனாப்பிள்துண்டுகள் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்க்கு கெட்டியாக கலக்கவும்.

*அவன் டிரேயில் கொஞ்சம் மாவு தூவி மாவை வட்டமாக 1 இஞ்ச் அளவில் தடிமனாக தட்டு முக்கோணங்களாக வெட்டவும்.

*190°C முற்சூடு செய்த அவனில் 25 - 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

Nithu Bala said...

Superb..looks so tempting..bookmarked:-)

Chitra said...

Looks much much much much better and tastier than the dried ones that I tried from the coffee shops. Thank you for the delicious recipe. :-)

Prema said...

very nice,super...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

wow. looking nice.. 2 skones parcel please :D

vanathy said...

Menaga, looking very lovely. I will try this very soon and let you know.

நட்புடன் ஜமால் said...

noted since pineapple one of my fav

சசிகுமார் said...

அக்கா வீட்ல ஏதாவது செய்து கொண்டே இருப்பீங்களா. ஏன்னா தினமும் விதவிதமா செய்து அசத்துறீங்களே.

Aruna Manikandan said...

looks delicous dear :-)

Asiya Omar said...

புதுசாக இருக்கே.அருமை.

Padhu Sankar said...

Interesting recipe!!

சிநேகிதன் அக்பர் said...

புதுவிதமான ரெஸிப்பி. நன்றி மேனகா.

Ahamed irshad said...

Hungryyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy...

Raks said...

Very new recipe to me,sounds great!

ஸாதிகா said...

ஓட்ஸில் வெளுத்துக்கட்டுகின்றீர்கள் மேனகா.

GEETHA ACHAL said...

மிகவும் வித்தியசமாக இருக்கின்றது,..அருமை..

San said...

Very much an interesting scones to look forward to....droolworthy dessert menaga

Menaga Sathia said...

நன்றி நிது!!

நன்றி சித்ரா!!

நன்றி பிரேமலதா!!

நன்றி ஆனந்தி!! பார்சல் உங்களுக்கு அனுப்பியாச்சு..

Menaga Sathia said...

நன்றி வானதி!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி சகோ!!

நன்றி சசி!!

நன்றி அருணா!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி பது!!

நன்றி அக்பர்!!

நன்ரி அஹமது!!

Menaga Sathia said...

நன்றி ராஜேஸ்வரி!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி கீதா!!!!

நன்றி சான் !!

Nathanjagk said...

ருசி நல்லா இருக்கும் போல.. ஆனா பார்ப்பதற்கு ராகி ரொட்டி மாதிரி இருக்கே :))
ப்ரவுன் சர்க்கரை என்றால் (ப்ரவுன்-ஷுகர் என்று புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கு) வெல்லத்தூள் என்று நினைக்கிறேன்.
அவனில் முற்சூடு புரியவில்லையே???

Priya Suresh said...

Pineapple scones looks super..

Menaga Sathia said...

பைனாப்பிள் சுவையோடு சூப்பராயிருக்கும்..ப்ரவுன் சுகர்ன்னா வெல்லத்தூள் இல்லைங்க.வெள்ளை சர்க்கரை மாதிரியே க்ரிஸ்டலா ப்ரவுன் கலர்ல இருக்கும்.வெள்ளை சுகரை விட பிரவுன் சுகர் ரொம்ப நல்லது...190 டிகிரிக்கு 25-30 டைம் செட் செய்து விட்டு 10 நிமிடன் அவன் சூடானதும் பேக் செய்து எடுக்கனும்.அதைதான் குறிப்பிட்டுள்ளேன்.நன்றி சகோ!!

நன்றி ப்ரியா!!

Nathanjagk said...

பிரவுன் ஷுகர் வெள்ளைச் சர்க்கரையை விட கலோரிகள் கூட குறைவு என்று அறிந்து கொண்டேன்.
விளக்கத்திற்கு மிக்க நன்றி!!

01 09 10