Wednesday 1 September 2010 | By: Menaga Sathia

பூந்தி லட்டு/Boondhi Ladoo | Diwali Recipes

தே.பொருட்கள்:
கடலை மாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
சமையல் சோடா - 1 சிட்டிகை
நெய் - 3 டீஸ்பூன்

கல்கண்டு- 1/2 டேபிள்ஸ்பூன்
பச்சை கற்பூரம்- 1 சிட்டிகை
கிராம்பு -4
ஜாதிக்காய் பொடி- 1/8 டீஸ்பூன்

 முந்திரி,திராட்சை - 1/8 க‌ப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :
*கடலை மாவு+சமையல் சோடா இரண்டையும் கலந்து சலிக்கவும்.

*அதனுடன் மஞ்சள் கலர்+1 டீஸ்பூன் நெய் கலந்து தோசை மாவு பதத்திற்க்கு நீர் சேர்த்து கலக்கவும்.கண் கரண்டியில் ஊற்றினால் மாவு விழணும் அதுதான் சரியான பதம்.

*இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு 3/4 கப் நீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.

*2 கம்பி பதம் பாகு காய்ச்சவும்.2 விரல்கலுக்கு இடையே தொட்டல் 2 இழை போல வரும்.

*1 கம்பி பதம் வந்ததும் சில நொடிகலிலேயே 2 கம்பி பதம் வரும்,கவனமாக எடுக்கவும்.

*எல்லா மாவையும் கண்கரண்டியில் தோய்த்து பூந்திகளாக பொரித்து வைக்கவும்.




*பொரித்த பூந்திகளை சர்க்கரை பாகில் கலந்ததும் பச்சை கற்பூரத்தை கையால் நன்கு பொடித்து கலந்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.



*நெய்யில் கிராம்பு+முந்திரி திராட்சை+ஜாதிக்காய் பொடி சேர்த்து வறுத்து பூந்தியில் சேர்க்கவும்.

*கடைசியாக கற்கண்டு சேர்த்து லட்டுகளாக பிடிக்கவும்.
பி.கு:

*முதலில் பூந்தியை பொரித்த பிறகு,கடைசியாக சர்க்கரை பாகு வைத்து லட்டு பிடிக்கவும்.

*கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.ஆறினால் கூட பூந்திகளை அழுத்தி பிடிக்கும் போது சர்க்கரை பாகிலிருந்து வரும் நீரிலயே லட்டு பிடிக்க முடியும்.

*1 கம்பி பதத்திலும் பாகு வைத்து லட்டு பிடிக்கலாம்.

*2 கம்பி பதம் வைத்து செய்தால் லட்டு சர்க்கரை பாகு பூத்து அழகாக இருக்கும்,மேலும் கூடுதல் நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.



31 பேர் ருசி பார்த்தவர்கள்:

'பரிவை' சே.குமார் said...

Enakku lattu romba pidikkum. padangaludan arumai.

en manaivi arumaiyaga seivaar. enathu uravukal abudhabi vanthal kandippa lattu varum.

Chef.Palani Murugan, said...

ல‌ட்டு super!

இமா க்றிஸ் said...

படங்களெல்லாம் அழகாக ஆசையைத் தூண்டுவதாக இருக்கிறது மேனகா. பாராட்டுக்கள்.
எனக்கும் பூந்திலட்டு பிடிக்கும். ஒரு நாளும் செய்ததில்லை. முடிந்தால் செய்து பார்க்கிறேன்.

Asiya Omar said...

லட்டு அருமையாக இருக்கு மேனகா.

Ahamed irshad said...

லட்டு அருமைங்க..

Umm Mymoonah said...

boondi laddu super, very nice.

Ms.Chitchat said...

Tasty laddu. Illustrations are self-explanatory,superb.

Kanchana Radhakrishnan said...

super laddu.
படங்களெல்லாம் அழகாக இருக்கிறது மேனகா. பாராட்டுக்கள்.

Cool Lassi(e) said...

Laddu looks splendid! I wish i had one.

Cool Lassi(e) said...

Laddu Super. I wish I had one.

புவனேஸ்வரி ராமநாதன் said...

லட்டு சூப்பர்.

Niloufer Riyaz said...

superana laddu nichayam seidu parkiraen

Agila said...

சமையல் சோடா என்றால் baking soda வா?

Menaga Sathia said...

நன்றி சகோ!! உங்களுக்கு லட்டு வரும்போது எனக்கும் பார்சல் அனுப்பிவிடுங்க...

நன்றி செஃப்!!

நன்றி இமா!! செய்து பாருங்கள்,ரொம்ப ஈசிதான்..

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

நன்றி அஹமது!!

நன்றி ஆயிஷா!!

நன்றி சிச்சாட்!!

நன்றி காஞ்சனா!!

Menaga Sathia said...

நன்றி கூல்!!

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி நிலோபர்! செய்து பார்த்து சொல்லுங்கள்...

Menaga Sathia said...

ஆமாம் சமையல் சோடா என்பது பேக்கிங் சோடாதான் அகிலா...

vanathy said...

சூப்பர் லட்டு. நாளைக்கு செய்து பார்க்கணும்.

ஸாதிகா said...

எல்லோருகும் பிடித்த ஸ்வீட் லட்டை இத்தனை சுலபமாக செய்முறிகுறிப்புடன் தந்திருக்கும் மேனகாவுக்கு வாழ்த்துக்கள்.

Nithu Bala said...

Yummy..yummy..there is an event coming up in my blog..hope you can send this delicious recipe to that..

Prema said...

wow pls pass the plate,perfect for the celebration...

Chitra said...

லட்டு............ சூப்பர்......... ஜொள்ளிங் .....

Menaga Sathia said...

நன்றி வானதி!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி நிது!!

நன்றி பிரேமலதா!!

நன்றி சித்ரா!!

Mahi said...

லட்டு அருமையா இருக்கு மேனகா!

Priya Suresh said...

Ladoo pakkura pothy rendu yeduthukalam pola irruku..azhaga irruku..

Priya said...

மேனகா நானும் யார் யாரையோ கேட்டு இப்ப கொஞ்ச நாள் முன்னாலதான் லட்டு செய்ய கத்துக்கிட்டேன். உங்களின் இந்த குறிப்பு எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கும், நன்றி!

Hamsi said...

Perfect laddus. Simple and delicious.

Menaga Sathia said...

நன்றி மகி!!

நன்றி ப்ரியா!!

நன்றி ப்ரியா!! உங்களுக்கு உபயோகபடுவதில் மிக்க மகிழ்ச்சி...

நன்றி விஸ்டம்.காம்!!

Jaleela Kamal said...

போன வருடம் முயற்சி, செய்து பூந்தியானது, இப்ப பர்பெக்டா வந்து விட்டது இல்லையா மேனகா?

எல்லோருக்கும் பிடித்த லட்டு அருமை

Menaga Sathia said...

நன்றி ஜலிலாக்கா!! ஆமாம் அக்கா போன வருடம் லட்டு பூந்தியாகிவிட்டது..இப்போ பூந்தி லட்டாக மாறிவிட்டது...

துளசி கோபால் said...

ஆஹா.... இப்பதான் லட்டு பார்த்தேன்.

அருமை மேனகா!

பாகு கொஞ்சம் இறுகிப்போய்விட்டாலும் மைக்ரோவேவில் 10 விநாடி வச்சு எடுத்துட்டு லட்டு பிடிக்கலாம்.

நான் எண்ணெய் பயன்படுத்துவதில்லை. 500 கிராம் வெண்ணெயை உருக்கி நெய் காய்ச்சிக் கொள்வேன்.

பூஜைக்குன்னு செய்வதால் பெருமாளுக்கு நெய் லட்டாக இருக்கட்டுமேன்னுதான்:-)

01 09 10